எண்ணிய காரியம் நிறைவேற - சாய்பாபா விரத விதிமுறைகள்
சாய்பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து 9 வியாழக்கிழமை விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பிய பலனை அடையலாம்.
சாய் பாபா விரதம்:
இந்த கலியுகத்தில் அவதரித்த மகான்கள் பலர் அவர்களுள் ஒருவரான சீரடி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள் அநேகம். சாய்பாபாவின் மேல் நம்பிக்கை வைத்து 9 வியாழக்கிழமை விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பிய பலனை அடையலாம்.
தமிழக மக்களுக்கு சீரடி சாய்பாபாவின் விரத விதிமுறைகளை எடுத்துரைக்க இது எனக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். சாய் விரதம் மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை படிக்கவும்.
சாய்பாபா விரத விதிமுறைகள்:
- இந்த விரதத்தை ஆண் பெண் குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த விரதத்தை சாதி மத பேதமும் இன்றி எந்த சார்புகளும் செய்யலாம்.
- இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. வியாழக்கிழமைகள் விதிமுறையின் படி விரதம் இருந்தால் நிச்சயம் விரும்பி எண்ணங்கள் நிறைவேறும்.
- எந்த ஒரு வியாழக்கிழமையிலும் சாய் நாமத்தை எண்ணி விரதத்தை ஆரம்பிக்கலாம்.
- காலை அல்லது மாலை சாயி பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய பலகையில் மஞ்சள் துணி விரித்து அதன் மேல் சாய்பாபா புகைப்படம் அல்லது விக்ரகத்தை வைத்து, சந்தன, குங்குமம் வைத்து மஞ்சள் நிற மலர்கள் (அல்லது) மாலை அணிவிக்க வேண்டும்.
- ஊதுபத்தியும், விளக்கும் ஏற்ற வேண்டும்.
- சாய் பாபாவின் பாடல்களான சாய் பாபா ஸ்மரனை, சாய் பாபா பாவனி, சாய் பாபா பாமாலை, சாய் பாபா பிரார்த்தனை , சாயிநாதர் அஷ்டகம் போன்ற பாடல்களை பாட வேண்டும்.
- சாய்பாபாவிற்கு நைவேத்தியம் வைத்து பூஜை செய்த பிறகு பிரசாதத்தை விநியோகிக்கவும்.
- இந்த விரதத்தை பழம், திரவ ஆகாரங்கள் உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள். ஏதாவது ஒரு வேளை உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதத்தை செய்யக்கூடாது.
- ஒன்பது வியாழக் கிழமைகளும் முடிந்தால் சாய்பாபா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் வீட்டிலேயே சாய்பாபாவை மனதார நினைத்து பூஜை செய்யவும்.
- வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை தொடரலாம்.
- விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு (அல்லது) பிற காரணங்களாலோ விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக் கிழமையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல். இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.
- இந்த விரதத்தை நிறைவு செய்யும் போது ஏழைகளுக்கு உணவு அளிக்க வேண்டும். நேராக உணவு அளிக்க இயலாதவர்கள் யார் மூலமாகவும் பணமாகவோ, உணவாகவோ கொடுத்து அனுப்பலாம்.
மேற்கூறிய விதிமுறையின்படி விரதத்தை செய்தால் நிச்சயமாக எண்ணிய காரியம் நிறைவேறும்.